நீ என்ன வேணாலும் பண்ணிக்க என் மகளை விட்டுவிடு! மனைவி மீது கோபத்தில் தாடி பாலாஜி
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் தாடி பாலாஜி சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒருசில வாரங்களில் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டார்.
முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் நடித்து வந்த தாடி பாலாஜி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான கலக்க போவது யாரு, சிரிப்புடா போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வந்தார். அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார்.
திருமணம் முதல் விவாகரத்து வரை:-
நித்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட தாடி பாலாஜி சில வருங்களுக்கு முன் தன்னையும் தன் மகள் போஷிகாவையும் துன்புறுத்தி வருவதாக போலிசில் புகாரளித்து பெரியளவில் பேசப்பட்டார். வேறொருவருடன் தொடர்பில் மனைவி நித்யா இருக்கிறார் என்று தாடி பாலாஜி புகாரளித்தார்.
இதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்த இருவரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இணைந்தனர். ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடந்துவார்கள் என்று எதிர்ப்பார்த்த நிலையில் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் வழக்கமான சண்டையை ஆரம்பித்தார்கள்.
மகள் படிப்பு வீண்:-
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பிறகு தனது வேலையில் கவனம் செலுத்திய தாடி பாலாஜி தன் மகள் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு மகள் படிப்பு மிகவும் மோசமாக இருப்பதாகவும் பள்ளிக்கு அனுப்பாமல் லீவ் போட்டுவிட்டு மகள் போஷிகாவை நிகழ்ச்சிகளுக்கு கூட்டிச்சென்று,
இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பயன்படுத்தி வருவதாகவும் கூறி புகாரளித்துள்ளார். ரீல்ஸில் நபர்கள் கூறும் கருத்துக்கள் மோசமாக இருக்கிறது. நித்யா அவர்கள் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழலாம். என்மகளை கெடுக்காமல் இருந்தால் போதும். என்னிடம் மகள் வர காசு கேட்டு மிரட்டியும் வருகிறார்கள் என்று பத்திரிக்கையாளர் பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் விவாகரத்து கொடுக்க 12 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக கேட்டு மிரட்டுகிறார் நித்யா. மகளை வைத்து பல தவறான விஷயங்களை நித்யா செய்து வருகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.