விஜய்யின் தலைவா பட நடிகை ராகினியா இது!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
இயக்குநர் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய், அமலா பால், சந்தானம், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் 2013ல் வெளியான படம் தான் தலைவா.

பல எதிர்ப்புகளை மீறி வெளியான இப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றது. தற்போது இப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ராகினி நந்த்வானி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ராகினி நந்த்வானி
விஜய்யை காதலிக்கும் பெண்ணாக நடித்த ராகினி, தனக்கு கொடுத்த ரோலை நேர்த்தியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தலைவா படம் அவருக்கு முதல் படமில்லை, அதற்கு முன் 2005ல் வெளியான அயோத்யா என்ற படம் தான் அறிமுகப்படம்.

அதன்பின் இந்தி படங்களில் நடித்து வந்தார். 2014ல் மோகன்லால் நடித்த பெருச்சாழி என்ற படத்திலும் 2017ல் வெளியான ஹதியா என்ற இந்தி படத்திலும் நடித்தார். அதன்பின் ஆள் அடையாளம் தெரியாமல் போன ராகினி சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
