விஜய்க்காக சூப்பர் ஸ்டாரை ஓரம்கட்டும் நெல்சன்! என்னப்பா உன் பிரச்சனை..

vijay nelson anirudh superstar rajinikanth beast thalaivar169
By Edward Apr 10, 2022 10:50 PM GMT
Report

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு பிறகு விஜய்யின் பிஸ்ட் படத்தினை எடுத்து முடித்துவிட்டு அதன் பிரமோஷன் விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் நெல்சன். படம் ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் அடுத்து நெல்சன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி சேர்கிறார்.

ரஜினி 169 படம் பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார். தலைவர் 169 என தற்காலிகமாக தான் பெயர் சூட்டி இருக்கின்றனர். ரஜினிக்கு நெல்சன் எழுதிய கதை எப்படி இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது. இதை விஜய்யுடன் நேர்காணலில் இந்த விஷயத்தையும் நெல்சன் கூறியுள்ளார். மேலும், பீஸ்ட் படம் முடித்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் நிலையில், ரஜினி படத்திற்காக முதற்கட்ட பணிகள் முடிக்க நேரம் ஆகும் என்பதால் தான் இந்த தாமதம்.

மேலும் ரஜினி ஷூட்டிங் தொடங்கும் முன்பு அமெரிக்காவுக்கு சென்று வர இருக்கிறார். இந்த காரணங்களுக்காக தான் ரஜினி 169 படத்தி ஷூட்டிங் ஆரம்பமாக ஆகஸ்ட் மாதத்தைவிட சில மாதங்கள் தள்ளிப்போகும் எனவும் கூறப்படுகிறது.