நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? ரஜினியின் தலைவர்169 படத்தின் இயக்குனர் இவர்தான்!!

nelson superstar rajinikanth thalaivar169
By Edward Apr 19, 2022 06:25 PM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தர்பார், அண்ணாத்த போன்ற படங்களின் தோல்வியால் யார் சூப்பர் ஸ்டாரை இயக்கப்போவது என்ற கேள்வி மக்களிடையே கேள்விக்குறியாக இருந்து வந்தது.

பல இயக்குனர்களை சந்தித்து கதை கேட்டு வந்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் பட இயக்குனரை கமிட் செய்தார். பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே தலைவர் 169 படத்தினை நெல்சனுக்கு அளித்தார்.

அதன் அதிகாரப்பூர்வ தகவல் சன் பிச்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வந்ததால் நெல்சனை பலர் கிண்டல் செய்து கலாய்த்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் சென்று பீஸ்ட் படத்தினை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில நிமிடங்கள் அமைதியாக இருந்து பின் ஐஸ்கிரீம் நன்றாக இருக்கிறது என்று கூறி சென்றார் என்ற செய்தி வைரலானது.

இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த படத்தில் நெல்சனை வைக்கலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் இருந்து வந்தாராம். இதனால் அடுத்த படம் அட்லீ இல்லை வேறு யாரா என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது.

இன்று காலையில் இருந்து தலைவர் 169 மற்றும் நெல்சன் ஹாஷ்டேக் இணையத்தில் டிரெண்ட்டாகி இருந்தது. அதற்கு காரணம் நெல்சன் அவரது சமுகவலைத்தளபக்கத்தில் பையோ பிரஃபைலில் Thalaivar169 என்பதை எடுத்து விட்டு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை மட்டும் வைத்திருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் அதை மீண்டும் இயக்குனர் நெல்சன் தலைவர் 169 படத்தின் பெயரை பதிவிட்டுள்ளார். இதிலிருந்து சூப்பர் ஸ்டாரை இயக்கப்போவது நெல்சன் தான் என்பது உறுதியானது. இதனை வைத்து நெட்டிசன்கள் இணையத்தில் மீம்ஸ்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

GalleryGallery