தலைவர் 169-க்கு சூப்பர் ஸ்டார் சம்பளம் இத்தனை கோடியா? இந்திய சினிமாவைவே அதிரவைத்த நெல்சன்..

Rajinikanth Anirudh Ravichander Nelson Dilipkumar
1 மாதம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் படம் என்றாலே பல இயக்குனர்கள் போட்டிப்போட்டு கதையை கூற படையெடுப்பார்கள். அப்படி சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் கதையளவில் வெற்றிய பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

கடந்த ஆண்டு இறுதியில் வெளியான அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறாமல் சிறுத்தை சிவா ஏமாற்றினார். இதன்பின் ரஜினிகாந்தை யார் இயக்கப்போவது என்று கேள்விகள் எழுந்தது.

பல இயக்குனர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் கடைசியான விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே அப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாரை தலைவர் 169க்கு புக் செய்தார். பல எதிர்ப்பார்ப்புகள் இருந்த பீஸ்ட் படமும் படுமோசமான கதை என்று தோல்வியை சந்திதது.

ஆனால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் கதையில் நடிப்பாரா என்ற கேள்வியும் சர்ச்சையானது. முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்ற பாபா படத்தில் பாடல் வரிக்கேற்ப ரஜினிகாந்த் நெல்சன் , சன்பிச்சர்ஸ், அனிரூத் கூட்டணி உறுதியானது.

இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆக்ஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்தது. இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் சம்பளம் தலைவர் 169-க்காக சுமார் ரூ 150 கோடி அளவில் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியளவில் இதுவரை சல்மான் கான், அமீர் கான், பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மட்டுமே பெற்று வந்தனர். அதில் படத்தின் வசூலில் ஷேர் தான் கொடுக்கப்பட்டது. ஆனால் முதன்முறை படத்தின் சம்பளமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகந்திற்கு தான் 150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்து வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.