பிரச்சனை வரும்னு விஜயகாந்த் அப்பவே சொன்னாரு..இன்னைக்கு!! நடிகை அம்பிகா எமோஷனல்..
அம்பிகா - ராதா
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதா தன்னுடைய சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா மீது மோசடி புகாரளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக, இருவரும் மாறிமாறி பத்திரிக்கையாளர்களை சந்தித்து புகாரளித்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன் அம்பிகா, ராதாவிற்கு ரூ. 5 ஆயிரம் கோடி சொத்து இருக்கும் என்றும் எனக்கு அவர் ரூ. 96 கோடி கொடுக்க வேண்டும் என்னை திருடி என்று கூறியதால் மான நஷ்ட வழக்கு போடுவதாகவும் கூறியிருந்தார் அம்பிகா.

விஜயகாந்த் அப்பவே சொன்னாரு
இந்நிலையில் நடிகை அம்பிகா, நான் ஏ ஆர் எஸ் கார்டன் வாங்கிய சமயத்தில் அது விஜயகாந்துக்கு தெரியும். அப்போது அவர் என்னிடம் நீ இப்படியே இருந்தால் நாளைக்கு பிரச்சனை வரும், கண்டிப்பாக இந்த சொத்தை வச்சு உங்களுக்குள் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு என்று சொன்னார்.
அது இன்னைக்கு நடந்துடுச்சு, ஆனால் அவர் மட்டும் இருந்திருந்தால் இப்போது நியாயமா நடந்திருப்பார். சரியாக பேச்சு வார்த்தை செய்து இந்த பிரச்சனையை முடித்து வைத்திருப்பார். ஆரம்பத்தில் இதுபற்றி பேசும்போதே நான் இருக்கிறேன் பார்த்துக்கலாம் என்று விஜயகாந்த் கூறினார்.
இன்னைக்கு கோர்ட் வரைக்கும் பிரச்சனை போயிடுச்சு. இனி யாரு பேச்சுவார்த்தை நடத்தினாலும் இதில் தீர்வு வராது. நான் ராதாவுடன் பக்கத்தில் உட்கார்ந்து இனி பேசவேமாட்டேன். எதுவாக இருந்தாலும் லீகலாக தான் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று எமோஷனலாக பேசியுள்ளார் அம்பிகா.