அதுக்குள்ள பீஸ்ட் 2-ஆ? தளபதி 66 ஷூட்டிங் பாதி முடிஞ்சு போச்சா?

vijay nelson vamsi rashmikamandanna beast thalapathy66 தளபதி66
By Edward Apr 14, 2022 05:40 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். நெல்சன் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து சமீபத்தில் வெளியேனது. மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான் பீஸ்ட் படம் 800 தியேட்டர்களில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

ஆனால் விமர்சன ரீதியாக மக்கள் மனதை ஈர்க்காமல் கலவையான விமர்சனத்தையே கொடுத்து வருகிறது. இதையடுத்து விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தின் பூஜையை ஆரம்பித்து ஷூட்டிங்கினையும் துவங்கினார். நடிகை ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க நடிகர் சரத்குமார் விஜய்க்கு அப்பாவாகவும் நடிக்கவுள்ளார். மேலும் ஏஸ் தமன் இசையமைக்கவுள்ளார்.

ஷூட்டிங் ஆரம்பித்து சில வாரங்களே ஆன நிலையில் இயக்குனர் வம்சி தளபதி 66 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் இப்படத்திற்கான இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

என்னால் முடிந்த அளவிற்கு நல்ல படத்தை கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார். இப்போதானே பீஸ்ட் படத்தின் அதிர்ச்சியில் இருக்கோம் அதுகுள்ள பீஸ்ட் பார்ட் 2வை தாங்க சக்தி இல்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery