ஆறே நாளில் இத்தனை கோடி செலவு! பீஸ்ட்-ஆல் பயத்தை கொடுக்கும் தளபதி 66 இயக்குனர்..
தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படம் வெளியாகி பெரிய எதிர்ப்பார்ப்பை கொண்டு பார்த்து வருகிறார்கள். இப்படத்தினை அடுத்து பீஸ்ட் படம் வெளியாகுவதற்கு முன் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66-ஐ இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
சமீபத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில் ராஜ் தயாரிப்பில் படத்தின் பூஜை நடைபெற்றது. தளபதி 66 படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கையில் விஜய்யின் மற்ற படங்களுக்கு செட் போடப்பட்டதை விட பிரம்மாண்ட அளவில் செட் போட்டுள்ளனர்.
இந்த செட்டில் தான் அதிகமான காட்சிகள் அமையவுள்ளதால் 4.5 கோடி செலவில் இதுவரை செட் போடாப்பட்டுள்லது. படத்தின் பட்ஜெட் இன்னும் வெளியாகாத நிலையில் படத்தின் முதல் செட்டிற்கே இத்தனை கோடி செலவினை வைத்துள்ளார் இயக்குனர் வம்சி.
பீஸ்ட் படத்தினை எப்படியாவது ஓவர்ட்ராக் செய்ய வேண்டும் என்று இதுபோன்ற பிளான் போடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆக்ஸ்ட் மாதத்திற்குள் படப்பிடிப்பினை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம். இதேபோல் ஏகே 61 படமும் இரு மாத செட்டியூலில் இருப்பதால் இரு மாதங்களில் படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு வெளியிட பிளான் போடப்பட்டுள்ளதாம்.