மெர்சல் டு பீஸ்ட்? இந்த விசயத்தில் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே காப்பியடிக்கும் தளபதி66

Vijay Beast Dil Raju Vamshi Paidipally
By Edward Jun 15, 2022 12:20 PM GMT
Edward

Edward

Report

பீஸ்ட் படத்திற்கு பின் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜ் தயாரிப்பில் விஜய்யின் தளபதின் 66 உருவாகி வருகிறது. ராஷ்மிகா மந்தனா ஜோடியாக, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், சம்யுக்தா, சங்கீதா, ஷியாம், குஷ்பு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே சேர்ந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

தமன் இசையில் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. குடும்பம் கலந்த செண்டிமெண்ட் படமாக தயாராகி வரும் இப்படத்தில் பர்ஸ்ட் லுக் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆறாவாரத்துட காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தாண்டு பொங்கலுக்கு படத்தினை வெளியிட திட்டமிட்டு இருப்பதால் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட்டாக அமைக்க படக்குழு முடிவெடுத்துள்ளார்களாம்.

ஜூன் 22 ஆம் தேதி தளபதி பிறந்த நாளன்று படத்தின் டைட்டிலும், பர்ஸ்ட் லுக்கும் வெளியாகவுள்ளது. இந்த விசயம் விஜய்யின் மெர்சல் படத்தில் ஆரம்பித்து பீஸ்ட் படம் வரை இந்த வழக்கத்தை வைத்துள்ளார்கள் விஜய்யின் படக்குழுவினர்.

பிறந்தநாளுக்கு முந்தினம் ஜூன் 21 மாலை 6 மணிக்கும் ஜூன் 22ல் நள்ளிரவு 12 மணிக்கு செகண்ட் லுக் போஸ்டரும் வெளியிடவுள்ளார்களாம். இந்த பார்முலாவை பீஸ்ட் படத்தில் இயக்குனர் நெல்சனும் பின்பற்றியிருக்கிறாராம்.