தயாரிப்பாளரை நடுத்தெருவில் நிறுத்திய தம்பி ராமையா.. உடம்பு முழுக்க விஷம்
காமெடி நடிகர் தம்பி ராமையாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு காமெடியில் கலக்கி வருபவர் அவர். தற்போது அவரது மகனும் பாப்புலர் தான். ஜீ தமிழ் டிவியின் சர்வைவர் ஷோவில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார்.
உமாபதி ராமையா சில படங்களில் நடித்தும் அவை பிளாப் ஆனதால் பெரிதும் அறியப்படாத நடிகராக தான் இருந்தார். சர்வைவர் தான் அவரை அதிகம் பாப்புலர் ஆக்கியது எனலாம்.
உமாபதி ராமையா நடித்து இருக்கும் தண்ணி வண்டி என்ற படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. ஆனால் ஓடவில்லை. தயாரிப்பாளர் தற்போது தம்பி ராமையா மற்றும் மகன் உமாபதி மீது அதிர்ச்சி புகார் கூறி இருக்கிறார்.
ப்ரோமோஷனுக்கு தம்பி ராமையா மற்றும் உமாபதி இருவருமே வராததால் தான் படம் தோல்வி ஆனதாக கூறி இருக்கிறார். 3.5 கோடி ருபாய் போட்டு தண்ணி வண்டி படம் எடுத்துவிட்டு தற்போது நடுத்தெருவில் நிற்கிறாராம். தம்பி ராமையா உடம்பு முழுக்க விஷம், ஆனால் பேசுவது மட்டும் இனிமையாக பேசுவார் என பிரெஸ் மீட்டில் கூறி இருக்கிறார் அவர்.
என் மகனை விட படத்தில் வில்லி ரோலுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் இருக்கிறது என சொல்லி தான் தம்பி ராமையா தயாரிப்பாளரிடம் பிரச்சனை செய்து இருக்கிறார். உமாபதி ராமையாவும் ப்ரோமோஷனுக்கு வராமல் படம் எப்படி போனால் எனக்கென்ன என்று தான் இருந்திருக்கிறார்.