படப்பிடிப்பில் தர்ஷன் காலில் விழுந்த இயக்குனர்! ஷாக்காக படக்குழு..
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து ரஜினி, கமல், சூர்யா, அஜித், விஜய் போன்றவர்களின் படத்தினை இயக்கி முக்கிய பங்காற்றி வருபவர் கே எஸ் ரவிக்குமார்.
தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் கே எஸ் ரவிக்குமார், தெனாலி படத்திற்கு பிற்க்கு கூகுள் குட்டப்பா என்ற படத்தினை தயாரித்து நடித்தும் இருக்கிறார். பிக்பாஸ் நட்சத்திரங்களாக தர்ஷன் லொஸ்லியா லீட் ரோலில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய தர்ஷன், நான் காலில் விழுந்து நடிக்கும் காட்சியொன்றில், சரியாக நடிக்காத போது என் காலை பிடித்து இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுத்தார் ரவிக்குமார் சார் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
எந்த இயக்குனரும் வளர்ந்து வரும் இளம் நடிகர்களை உருவாக்க இப்படி செய்யும் மனம் யாருக்குத்தான் வரும் என்று கூறியுள்ளார் தர்ஷன்.