விக்னேஷ் சிவன் திருமண வாழ்க்கையையே மாற்றிய பிரபல நடிகை.. பின்னணியில் நடிகர் தனுஷ்

Dhanush Nayanthara Nazriya Nazim Vignesh Shivan
By Edward Apr 14, 2023 01:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, ஆரம்பத்தில் நடிகர் சிம்புவை காதலித்து வந்தார். அதன்பின் இருவருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்துவிட்டனர். சிம்புவை அடுத்து நடன இயக்குனர் பிரபுதேவாவை தீவிரமாக காதலித்து மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சென்றா நயன் தாரா. ஆனால், பிரபுதேவாவின் முதல் மனைவி போட்ட பிரச்சனையால் அவரையும் பிரிந்து தனிமையில் இருந்து வந்தார்.

விக்னேஷ் சிவன் திருமண வாழ்க்கையையே மாற்றிய பிரபல நடிகை.. பின்னணியில் நடிகர் தனுஷ் | That Actress Reason For Nayanthara Vignesh Love

இதனால் சினிமாவிற்கு பிரேக் எடுத்து பில்லா படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார் நயன். இதனைதொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நானும் ரவுடி தான் படத்தில் நடிக்க கமிட்டாகினார். அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் தனக்கு பக்கபலமாக இருந்த விக்னேஷ் சிவனை காதலித்து அதன்பின் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வந்தார் நயன்.

சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியொன்றில், நானும் ரவுடி தான் படம் உருவான கதையை கூறியிருக்கிறார்.

அதில், கதையை முதலில் விஜய் சேதுபதியிடம் கூறி அவர் கதையில் மாற்றம் கூறியதால் இரு ஆண்டுகள் தள்ளிப்போனது. அதன்பின் தான் நீங்கள் தான் பண்ணவேண்டும் என்று அவரிடம் கேட்டு கதையை மாற்ற முடியாது என்று கூறி கருணை விதத்தில் எனக்கு படம் பண்ண சம்மதித்தார். அதற்கிடையில் நடிகர் தனுஷின் விஐபி படத்தில் நானும், கபிலனும் சேர்ந்து போஸ்டர் டிசைன் நாங்கள் தான் செய்தோம்.

விக்னேஷ் சிவன் திருமண வாழ்க்கையையே மாற்றிய பிரபல நடிகை.. பின்னணியில் நடிகர் தனுஷ் | That Actress Reason For Nayanthara Vignesh Love

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படமான வை ராஜா வை படத்திற்கும் நாங்கள் தான் டிசைன். அப்போது ஐஸ்வர்யா மேம் தனுஷிடம் எங்களை பற்றி கூறினார். அதன்பின் விஐபி படத்தில் நடித்த போது நான் தனுஷிடம் அந்த கதையை கூறினேன். நான் தயாரிக்கிறேன், யார் நடிகர், நடிகை என்று கேட்டார்.

அப்போது கெளதம் கார்த்திக் தான் நடிக்க இருந்தது அதன்பின் விஜய் சேதுபதி ஓகேவாகினார். நயன் தாரா எப்படி வந்தார் என்ற கேள்விக்கு, கதையை யார் கிட்ட சொல்லனும்-ன்னு தனுஷ் கேட்டார். நான் நஸ்ரியாவை யோசித்து வைத்திருந்தேன். முக்கிய ரோல் என்பதால் தனுஷ் சார், நயன் தாராவை பார்த்து கதையை கூறச் சொன்னார்.

அதன்பின் ஆட்டோவில் சென்று 1.30 மணிநேரம் கதையை கூறிவிட்டேன். யாரும் பண்ணாத ஒன்றினை நயன் தாரா அப்போது செய்தது இதுவரையில் யாரையும் பார்த்ததில்லை. போன் ஆஃப் செய்து கதையை கூறுங்கள் என்று நயன் தாரா கேட்டதும் எனக்கு நம்பிக்கை வந்தது. அதன்பின் அவர் கேட்டு காமெடியை கேட்டு விழுந்து சிரித்துவிட்டார் நயன்.

விக்னேஷ் சிவன் திருமண வாழ்க்கையையே மாற்றிய பிரபல நடிகை.. பின்னணியில் நடிகர் தனுஷ் | That Actress Reason For Nayanthara Vignesh Love

கதை கூறி முடித்தவுடனே நான் படம் பண்ணுகிறேன் என்று கூறிவிட்டார். அப்படி தனுஷ் மட்டும் இப்படத்தில் நயன் தாராவிடம் சிபாரிசு செய்து அனுப்பாமல் இருந்திருந்தால், விக்னேஷ் சிவன் நஸ்ரியா அல்லது வேறு ஒரு நடிகையை வைத்து நானும் ரவுடி தான் கதையை செய்திருப்பார். அப்படி செய்திருந்தால் விக்னேஷ் சிவனுக்கும் நயனுக்கும் காதலும் திருமணமும் நடந்தே இருக்காது என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Gallery