தி பெட்-டிற்காக நடிகைக்கு ஒத்துழைப்பு கொடுத்த நடிகர்! அதுவும் அப்படியொரு குளிராம்..
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். பல ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுக்கும் விதமாக தி பெட் என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.
ஸ்ரீ நிதி பிரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் எஸ் மணி பாரதி சஸ்பென்ஸ் திரில்லர் படமாக எடுத்துள்ளார். ஐடி வேலையில் செய்யும் நண்பர்களுடன் ஊட்டிக்கு பிக்னிக் சென்று அங்கு நடக்கும் கொலை சம்பந்தமான கதைகளத்துடன் உருவாகியுள்ளது.
இப்படத்தின் பிரமோஷனுக்காக நடிகை சுருஸ்டி டாங்கே பேட்டியொன்றில், குட்டை ஆடையணிந்து ஊட்டி குளிரில் நடுங்கியபடி தான் நடித்திருந்தேன். சில சமயம் காய்ச்சல் அடித்தது. அப்போது தான் நடிகர் ஸ்ரீகாந்த் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து காட்சிகளை நடித்து கொடுக்க உதவினார்.
ஊட்டியில் இருக்கு ஓட்டல் விடுதியில் ஒரு பெட் தன்னைதேடி வருபவர்களிடம் என்ன கூறுவது பற்றிய படமாக அமைந்துள்ளது என கூறியுள்ளார்.
படத்தில் நெருக்கமான காட்சிகள் இருக்கும் என்பது கிடையாதாம். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படமாக தி பெட் இருக்கும் என்று கூறியுள்ளார் நடிகை சுருஷ்டி டாங்கே.