பூஜா ஹெக்டேவை விட தமன்னாவுக்கு இத்தனை லட்சம் தானா? லெஜண்ட் சரவணனால் பணத்தில் புரண்ட நடிகைகள்
சரவணா ஸ்டோர்ஸ் கடையில் நிறுவன அதிபராக இருக்கும் அருள் சரவணா சமீபத்தில் ஜேடி -ஜெர்ரி இயக்கத்தில் சரவணோ ஸ்டோர்ஸ் தயாரிப்பில் தி லெஜண்ட் என்ற படம் உருவாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன் இப்படம் ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் மொசலு மொசலோ மற்றும் வாடி வாசல் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் பல க்ளாமர் நடிகைகள் நடித்திருந்த இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் வெளியீடு சென்னை நேரு விளையாட்டு திடலில் நடைபெற்றது.
பிரம்மாண்ட முறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு மொத்தம் 10 நடிகைகள் வருகை தந்து நிகழ்ச்சியை வாய்ப்பிளக்க வைத்துள்ளனர், இந்நிலையில் வந்த 10 நடிகைகளுக்கு லெஜண்ட் சரவணா பல லட்சத்தில் செலவு செய்து வரவழைத்திருக்கிறாராம்.
அப்படி நடிகை பூஜா ஹெக்டேவிற்கு 25 லட்சமும், நடிகை தமன்னாவிற்கு 18 லட்சம் என்று கொடுத்துள்ளார். மேலும் ராய் லட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவருக்கும் 10 லட்சமும் கவர்ச்சி நாயகி யாஷிகா ஆனந்த் 8 லட்சமும், மற்ற நடிகைகளுக்கு தலா 5 லட்சமும் கொடுத்துள்ளார்களாம்.
மேலும் நடிகைகள் ரெடியாவதற்கு தனித்தனி கேரவனையும் சேர்த்து 30 கேரவனை நிகழ்ச்சிக்காக ரெடி செய்து கொடுத்துள்ளார். அதற்கு மட்டும் சுமார் 40 ஆயிரம் செலவு செய்து வாடகைக்கு எடுத்திருக்கிறாராம்.