போனி கபூருடன் இரண்டாம் திருமணம்!! கடைசி வரை நடிகை ஸ்ரீதேவி பயந்தது இவரைதான்
இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறும் அளவிற்கு தன்னுடைய நடிப்பால பல கோடி ரசிகர்களை ஈர்த்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், இந்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வந்தார் ஸ்ரீதேவி.

1980ல் ஆரம்பித்து கடைசியாக விஜய்யின் புலி படம் வரை தன்னுடைய அழகால் அனைவரையும் ஈர்த்து வந்தார். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ஸ்ரீதேவி ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் போனி கபூரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் இரு மகள்களுக்கு தயாரான ஸ்ரீதேவி அதன்பின்பும் முதல் மனைவியுடன் போனி கபூர் சென்று விடுவாரோ என்ற அச்சத்தோடு இருந்துள்ளாராம்.

அதுமட்டுமில்லாது முதல் மனைவியின் மூத்த மகன் அர்ஜுன் கபூரால் தனது வாழ்க்கைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்துடன் இருந்துள்ளாராம்.
கடைசிவரை இந்த பயத்தில் இருந்த ஸ்ரீதேவி கடந்த 2018ல் துபாய் ஓட்டலில் மர்மமான முறையில் மரணமடைந்தார். சமீபத்தில் போனி கபூர் தன்னுடைய மறைந்த மனைவியை நினைவு கூர்ந்து அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.