இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரிகள் இவர் தான்!! முதல் இடத்தில் இவர்தான்..
டாப் 10 கோடீஸ்வரிகள்
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர பெண் தொழிலதிபர்களில் முதல் இடத்தில் இருப்பவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?.

டாப் 10

டாப் 10 பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பவர் தான் ஃபால்குனி நாயர். Nykaa என்ற அழகுசாதன நிறுவனத்தின் நிறுவனர் தான் ஃபால்குனி. அவரின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 24,650 கோடி முதல் 25,500 கோடி வரை இருக்கும்.
இதில் 9வது இடத்தில் சுமார் ரூ. 25,500 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ள USV Pharma என்ற மருந்து நிறுவனத்தின் நிறுவனர் லீனா திவாரி தான்.
Thermax என்ற நிறுவனத்தின் நிறுவனர் அனு ஆகா, சுமார் ரூ. 26,350 கோடி சொத்து மதிப்புகளுடன் 8வது இடத்தில் இருக்கிறார்.

ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனரான ராதா வேம்பு சுமார் ரூ. 27,200 கோடி சொத்து மதிப்புகளுடன் 7வது இடத்திலும், BIOCON நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா ரூ. 28,900 கோடி மதிப்புடன் 6வது இடத்திலும் இருக்கிறார்கள்.

கோத்ரேஜ் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்மிதா கிருஷ்ணா கோத்ரேஜ், சுமார் ரூ. 29,750 கோடி சொத்துடன் 5 ஆம் இடத்திலும், ஹேவேல்ஸ் என்ற மின் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் நிறுவனர் வினோத் ராய் குப்தா ரூ. 39,950 கோடி சொத்துடன் 4வது இடத்திலும், Landmar Group நிறுவனத்தின் நிறுவனரான ரேணுகா ஜக்தியானி, சுமார் ரூ. 47,600 கோடி சொத்து மதிப்புடன் 3வது இடத்திலும் இருக்கிறார்கள்.

மறைந்த பங்குசந்தை ஜாம்பவானான ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன் ஜுன்வாலா ரூ. 60 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் 2வது இடத்திலும் இருக்கிறார்.
TOP 1
இந்தியாவின் கோடீஸ்வர பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் JSW நிறுவனத்தின் நிறுவனரான சாவித்ரி ஜிண்டால் முதல் இடத்தில் இருக்கிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2,91,550 கோடியாம்.