என்ன 5 கோடியா? நயன்தாரா மீது போடப்பட்ட குற்றச்சாட்டு.. உண்மை இதுதானாம்!!
நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் மீது தொடர்ந்து சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நயன்தாராவின் திருமண வீடியோ "Nayanthara: Beyond the Fairytale" என்ற பெயரில் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியானது.
இதில், நானும் ரவுடி தான் பட காட்சிகளை பயன்படுத்த தனுஷ் அனுமதி தரவில்லை என நயன்தாரா ஒரு அறிக்கை வெளியிட்டு தனுஷை திட்டி இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த பிரச்சனையை நீதிமன்றம் வரை கொண்டு சென்றார் தனுஷ்.
இந்நிலையில் நயன்தாரா சந்திரமுகி பட தயாரிப்பாளரிடமும் அனுமதி வாங்கவில்லை, அதனால் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவர்கள் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக செய்திகள் இணையத்தில் உலா வந்தது.
உண்மை இதுதானாம்
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் விதமாக நயன்தாரா தரப்பு NOC வாங்கிய லெட்டரை நேற்று வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில், சந்திரமுகி தயாரிப்பாளர்கள் நயன்தாரா மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை. ஆவணப்படத்தில் காட்சிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கியதாகவும் தெரிவித்து நயன்தாரா கூறியதை உறுதிப்படுத்தி உள்ளனர்.