உதவி கேட்டு கெஞ்சிய அஜித்பட நடிகர் தீப்பெட்டி கணேசன் திடீர் மரணம்! அதிர்ச்சியில் பிரபலங்கள்

movie dead theepetti ganesan billa2
By Jon Mar 23, 2021 03:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பில்லா 2, ரேணிகுண்டா, தென்மேற்கு பருவகாற்று உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து காமெடியனாக இருந்தவர் நடிகர் தீப்பெட்டி கணேசன். கடந்த சில மாதங்களுக்கு முன் பால் வாங்க கூட பணமில்லை என்று கூறி அஜித் உள்ளிட்ட பல பிரபலங்களிடம்m உதவி கேட்டு பேட்டி கொடுத்து வந்தார்.

குழந்தைகள் இருக்கும் நிலையில், லாக்டவுனில் பெரிய கஷ்டத்தில் இருந்தார். இதை அறிந்து சினேகன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் அவருக்கு உதவினர். இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் அவரது டிவிட்டர் பதிவில் அதிர்ச்சி செய்தியை பதிவிட்டுள்ளார்.

அதில் எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகர்ன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன் அன்புநிறை இதய அஞ்சலி கணேசா என்று பதிவிட்டுள்ளார். சீனு ராமசாமியின் டிவிட்டை பார்த்த பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.