தமிழில் என்னை அதுக்காக கேலி செய்தார்கள்..ஆனால்!! நடிகை ஸ்ருதி ஹாசன் வேதனை..
ஸ்ருதி ஹாசன்
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் கால்பதித்து நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். நடிகையாகவும் பாடகியாக புகழ் பெற்ற ஸ்ருதி ஹாசன், சென்னை, மும்பை என்று மாறிமாறி சென்று வேலை செய்து வருகிறார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னை கேலி செய்தவர்கள் பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
கிண்டல் செய்தனர்
அதில், ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் என் குரலுக்காக என்னை பலர் கிண்டல் செய்தனர். இந்தி ரசிகர்களுக்கு என்னுடைய டீப்பர் வாய்ஸ் பிடித்தது.
ஏனென்றால் ராணி முகர்ஜி, சுஷ்மிதா சென் ஆகியோரின் தனித்துவமான குரல்கள் அவர்களுக்கு முன்பே பரிச்சயமாகி இருந்ததால் அது பாலிவுட் ரசிகர்களுக்கு பிடித்ததாக ஸ்ருதி ஹாசன் தெரிவிவித்துள்ளார்.