பதட்டத்தின் உச்சத்தில் மகா.. அம்பிகாவிடம் சாமியார் சொன்ன விஷயம் என்ன? - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்
திருமாங்கல்யம்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். நேற்றைய எபிசோடில் மகாவை பார்த்த பூசாரி அவரை பின்தொடர்ந்து வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது மகா மறைந்து மறைந்து ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர சாமியாரும் அங்கு வந்துவிட மகா அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பிறகு அம்பிகாவும் சாமியார் லொகேஷனுக்கு வர அது அவரது வீடு என தெரிய வருகிறது. நீங்க என்ன சொன்னீங்க என்று அம்பிகா கேட்க மகா சாமியார் உண்மையை சொல்லப் போகிறார் என பதற்றம் அடைகிறாள். ஆனால் சாமியார் நான் சொன்ன பொண்ணு இங்க பையனோட மனைவி கிடையாது.
அந்த பொண்ணுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு அவ புருஷன் பேரு திருக்குமரன் மிலிட்டரியில் இருக்கான், நான்தான் உங்ககிட்ட தப்பா சொல்லிட்டேன் என்று சொல்கிறார். அம்பிகா அப்போ என் பையனுக்கு கல்யாணம் ஆகலையா என்று சந்தோஷப்படும் கேட்க சாமியார் அப்படித்தான் நினைக்கிறேன் என்று சொல்ல அம்பிகா நிம்மதி அடைகிறார். பிறகு பிளாஷ்பேக் ஓபனாக மகா நீங்க உண்மைய சொன்னா இந்த கல்யாணம் நின்னு போயிடும். நானும் உயிரோட இருக்க மாட்டேன் என்று சொன்னது தெரிய வருகிறது.

பிறகு அந்த சாமியார் மந்திரம் சொன்ன வாயால பொய் சொல்ல வச்சுட்டு அம்மா என்று வருத்தப்பட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி செல்ல காவேரி உன் வாழ்க்கை ரொம்ப பாவம் என மகாவிற்கு ஆறுதல் சொல்கிறாள். மறுபக்கம் பாட்டியை கதவில் கரண்ட் பில் ஷாக் வைத்து கொல்வதற்காக கஜேந்திரன் திட்டமிடுகிறான்.
இதன் மூலம் மகாவை வரவைக்க பிளான் போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.