சென்னைக்கு வந்த மகாவின் குடும்பம்.. திரு சமாளிக்க போவது எப்படி? - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்

Serials Tamil TV Serials
By Karthick Raja Sep 28, 2026 11:30 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். வெள்ளிக்கிழமை எபிசோடில் பாட்டி மகாவுக்கு போன் செய்து சென்னைக்கு கிளம்பி வருவதாக ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது விவரித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது மகா இந்த யோசனையில் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருக்க கவிதாவின் ரூமை துடைத்துக் கொண்டிருக்கும் போது கவிதா பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு மகாவைத் திட்டியபடி இருக்கிறாள்.

இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மகாவின் கை பட்டு கப் கீழே விழுந்து உடைய கவிதா இதை சாக்காக வைத்து மகாவை அறைய கை ஓங்க அந்த வழியாக வந்த திரு கவிதாவை தடுத்து நிறுத்தி தெரியாமல் போட்டு உடைச்சிருப்பா போய் வேலையை பாருங்க என அனுப்பி வைக்கிறான்.

சென்னைக்கு வந்த மகாவின் குடும்பம்.. திரு சமாளிக்க போவது எப்படி? - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட் | Thirumangalyam Serial Today Episode

பிறகு திரு மகா பதற்றமாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க மகா சொல்ல மறுக்கிறாள். இந்த சமயத்தில் பைரவன் திருவுக்கு போன் செய்து மாப்பிள்ளை நாங்க சென்னைக்கு தான் வந்துகிட்டு இருக்கோம் என்று சொல்ல திரு அதிர்ச்சி அடைகிறான். பிறகு மீண்டும் கொஞ்ச நேரத்தில் போன் செய்த பைரவன் நாங்க சென்னைக்கு வந்துட்டோம் பஸ் ஸ்டாண்ட்ல தான் இருப்போம் என்று சொல்ல திரு அங்கேயே இருங்க நான் வரேன் என்று சொல்கிறான்.

இன்னொரு பக்கம் கஜேந்திரன் மகாவை எப்படியாவது கண்டுபிடித்து கடத்தி விட வேண்டும் என சென்னை வந்திருக்கிறான். பசுபதி லலிதாவுக்கு போன் செய்து எங்க போயிருக்காங்க என்று விசாரிக்க முயற்சி செய்ய லலிதா போனை எடுக்க மறுக்கிறாள்.

பிறகு திருவும் மகாவும் காரில் வந்து கொண்டிருக்க இவர்களைப் பார்த்த கௌதம் ஆசிட் முட்டைகளை வீச முயற்சி செய்கிறான். பஸ் ஸ்டாண்டில் மகாவின் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வரும்போது ஒரு பக்கம் கஜேந்திரன் பின் தொடர இன்னொரு பக்கம் ஆசிட் முட்டையை பேச கௌதம் பின் தொடர பரபரப்பான காட்சிகள் நகர்கிறது.

சென்னைக்கு வந்த மகாவின் குடும்பம்.. திரு சமாளிக்க போவது எப்படி? - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட் | Thirumangalyam Serial Today Episode

கௌதம் வீசிய ஆசிட் முட்டை தவறுதலாக கஜேந்திரன் கார் மீது பட இருவருக்கும் இடையே சண்டை உருவாகிறது. இந்த சண்டையில் திருவின் காரை மிஸ் செய்து விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.