மகாவை வீட்டு வேலைக்காரியாக மாற்றும் கவிதா.. அம்பிகா கொடுத்த பதிலடி - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கவிதா மகாவை பழி தீர்க்க திட்டமிட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, மகா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த கவிதா மகா எவ்வளவு நாளைக்கு இந்த வீட்ல சும்மா வேலை செஞ்சுகிட்டு இருப்பா அவளுக்கு மாசம் மாசம் 5000 சம்பளம் கொடுத்து விடலாம் என்று திருவிடம் சொல்கிறாள்.
மேலும் மகாவுக்கு நீயே சம்பளம் கொடுத்து விடு.. இல்லன்னா என் கையில குடு நானே கொடுத்துவிடுகிறேன் என்று சொல்கிறாள். மகா கவிதா தன்னை பழி தீர்க்க ஏதோ செய்வதாக புரிந்து கொள்கிறாள். மேலும் மகா இந்த வீட்டு வேலைக்காரி அவ டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட கூடாது என சொல்கிறாள்.

இந்த சமயத்தில் அம்பிகா அங்கு வர மகா இந்த வீட்டு வேலைக்காரி என்று யார் சொன்னது அதை இந்த வீட்ல ஒருத்தி. அவ இந்த குடும்பத்துக்காக எவ்வளவோ செய்து இருக்கா. திரு திவ்யா கல்யாணம் நலபடியா நடக்கணும்னு பரிகாரம் எல்லாம் செய்து இருக்கா என்று மகாவிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்.
இதனால் கவிதா நோஸ்கட் வாங்கி அங்கிருந்து நகர்ந்து செல்ல திவ்யா திருவிடம் இனிமே அமைதியா இருக்கக்கூடாது.. மகாவுக்காக ஏதாவது செய்யணும் என சொல்கிறாள். இதைத் தொடர்ந்து கல்யாண பத்திரிக்கை வீட்டுக்கு வர அம்பிகா பத்திரிகையை கொண்டு போய் நல்லூர் அம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்து வர வேண்டும் என்று சொல்ல திரு அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.