லியோவால் நடுத்தெருவில் திரையரங்கு உரிமையாளர்கள்!! புட்டுபுட்டு வைத்த திருப்பூர் சுப்பிரமணி..
டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் மாஸ்டர், பீஸ்ட், வாரிசு படத்தினை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான நிலையில் 500 கோடி வசூலை நோக்கி லியோ படம் சென்றுள்ளது.
இந்நிலையில் லியோ படத்தினை பற்றி பல விமர்சனங்கள் கலவையான கருத்துக்கள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணி, சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
அதில், எல்லாவிதமான திரையரங்கு உரிமையாளர்களும் நல்ல வசூல் தொகையை கொடுத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் அவர்களை கசக்கி பிழிந்திருக்கிறார்கள். படத்தை வைத்து ஓடிடில எல்லாம் நல்ல வியாபாரம் நடந்திருக்கு.
இதனால் மன கஷ்டத்திலும், வேறு படம் வெளியாகாமல் இருப்பதால் இப்படத்தை ஓட்ட கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம் என்றும் இப்படியே போய்க் கொண்டிருந்தால் தியேட்டரை மூடவேண்டியது தான்.
இனி ஒரு மீட்டிங் போட்டு 60 சதவீதத்திற்கு மேல் எந்த படத்தையும் போடப்போவதில்லை என்று முடிவெடுக்கப்போகிறோம் என்று கூறியிருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணி. இதற்கு பலர் ஆதவராக கருத்துக்களை கொடுத்து வருகிறார்கள்.
Leo திரைப்படத்தால் திரையரங்கு உரிமையாளர்கள் வேதனை...
— ரஜினி சதிஷ் (@Csathis77179521) October 25, 2023
திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் #திருப்பூர்_சுப்பிரமணி....
டேய் என்ன டா இது இப்படி தான் வசூல் பண்ணுணிங்களா 500 கோடி 1000 கோடி ன்னு வடை சுட்டீங்களா. சூப்பர் டா mr லலித்
Mr விஜய்@7screenstudio@actorvijay pic.twitter.com/B0lkpFMa6x