பிக் பாஸ் 8ல் இருந்த இந்த வாரம் வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் ஷாக்
Bigg Boss
Bigg Boss Tamil 8
By Kathick
பிக் பாஸ் 8ல் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில் அதிக புள்ளிகள் பெற்று டிக்கெட் டு பினாலேவை வென்றுள்ளார் ரயான்.
இதன்மூலம் அவர் நேரடியாக பிக் பாஸ் பைனல் போட்டிக்கு தேர்வாகி இருக்கிறார். 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிலையில், இதிலிருந்து இந்த வாரம் யார்வெளியேற போகிறார் என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் 8ல் இருந்து இந்த வாரம் வெளியேறியுள்ள போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் ராணவ் வெளியேறியுள்ளார் என தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் 8ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்த ராணவ் பிக் பாஸிலிருந்து வெளியேறியுள்ளது, அவருடைய ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.