படப்பிடிப்புக்கு வர சொல்லி வாக்கு கொடுத்த பாரதிராஜா!! இளையராஜாவால் வாய்ப்பை இழந்த நடிகர்
காதலை மையப்படுத்தி தமிழில் பல படங்களை பல இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. அப்படி காதல் காவியமாய் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான படம் தான் அலைகள் ஓய்வதில்லை.
மீசையில்லா விடலைபடுவ காதலனாக நடிகர் கார்த்திக்கும், நடிகை ராதாவும் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் மூத்த நடிகர் தியாகராஜன் முக்கிய ரோலில் நடித்திருப்பார். ஆனால் இப்படத்தில் அவர் நடிக்க வேண்டிய ரோலில் வாகை சந்திரசேகர் தான் நடிக்கவிருந்ததாம்.
பாரதிராஜா அந்த ரோலுக்காக வாகை சந்திரசேகரை தேர்வு செய்து ஷூட்டிங்கிற்கு வரச்சொல்லி அனுப்பி இருப்பியிருக்கிறார். மற்றொரு பக்கம் இசைஞானி இளையராஜா நடிகர் தியாகராஜனுக்கு வாக்குறுதி கொடுத்து அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிக்க வைப்பதக சொல்லியுள்ளார்.
இதை அறிந்த பாரதிராஜா, ஷூட்டுக்கு வந்த வாகை சந்திரசேகரிடம் சென்று நாம் இன்னொரு படத்தில் சேர்ந்து பணி செய்யலாம்.
இளையராஜா, தியாகராஜனுக்கு வாக்குறுதி கொடுத்தால் அவரை தேர்வு செய்துவிட்டோம் என்று கூறியிருக்கிறார். அவரும் பெருந்தன்மையுடன் சம்மதித்து சென்றிருக்கிறார்.
ஒரு படத்தில் இளையராஜா இசையத்தால் என்றால் இயக்குனர்கள் சிலர் சிலர் கேரக்டரின் சிபாரிசை அவரிடம் கேட்பது வழக்கமாகவும் வைத்திருப்பார்களாம்.