வடிவேலுவை அடித்து வெலுத்த விஜயகாந்த்!! காப்பாற்றிய கருணாநிதி!! ரகசியத்தை உடைத்த நடிகர்...
வடிவேலு
தமிழ் சினிமாவில் டாம் காமெடி நடிகராக திகழ்ந்து வந்தவர் தான் வைகைப்புயல் வடிவேலு. தன் திறமையால் வளர்ந்தவர் தனக்கான ஒரு ஸ்டைலையும் பாடிலாங்வேஜ்யையும் வைத்த்க்கொண்டு முக்கிய இடத்தை பிடித்தார். ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்த வடிவேலு அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் கூட திமுகவுக்கு ஆதரவாக இருந்தார்.

இந்நிலையில், விஜயகாந்த், வடிவேலு, கருணாநிதி குறித்து நடிகர் தியாகு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். வடிவேலு எனக்கு போன் செய்து, விஜயகாந்த் என்னை அடித்துவிட்டார் என்று கூறினார்.
காப்பாற்றிய கருணாநிதி
உடனே நான் கருணாநிதிக்கு கால் செய்து வடிவேலுவை போட்டு அடிக்கிறார்களாம், காப்பாற்றுங்கள், மிகவும் வருத்தமாக இருக்கு என்று கூறினேன். உடனடியாக கருணாநிதி, அப்படியா நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
உடனே ஸ்டாலின் எனக்கு போன் செய்து என்னிடம் சொல்ல வேண்டியது தானே அப்பாவை ஏன் எழுப்பினீர்கள் என்று சொன்னார். வடிவேலு எனக்கு போன் செய்து கட்சியில் கூப்பிடுகிறார்கள் என்று சொன்னார்.

நான் நீ ஒரு படத்திற்கு ரூ. 2 கோடி வாங்குகிறாய் வேண்டாம் என்றேன். கட்சியில் சேர்த்துவிட்டார்கள். சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலு விஜயகாந்துக்கு குடைப்பிடித்து கொண்டு செல்வார், அதற்கு வடிவேலுவிற்கு ஒரு நாளைக்கு ரூ.250 சம்பளம் கிடைத்தது, என்னதான் நடந்தாலும் பழச மறக்கக்கூடாது, அதை மறப்பவன் துரோகிக்கு சமம் என்று தியாகு கூறியிருக்கிறார்.