துல்கரை மதிக்காத மணிரத்னம், கோபத்தில் துல்கர் சல்மான் எடுத்த முடிவு, மணிரத்னம் சபதம்
மணிரத்னம் இவருடைய இயக்கத்தில் நடிக்க பல ஆயிரம் நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.
இவர் இயக்கத்தில் வளர்ந்து வரும் போதே நடித்தவர் துல்கர் சல்மான். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ஓகே கண்மணி செம ஹிட் ஆனது. இதன் நட்பு காரணமாகவே துல்கர் கமலின் தக் லைப் படத்தில் நடிக்க சம்மதித்தார்.
ஆனால், கமல் அரசியல் பிரச்சாரம் என்பதால் தக் லைப் படத்தின் ஷுட்டிங் தாமதமாகி கொண்டே போவதால், சரி மற்றவர்கள் போஷன் எடுக்கலாம் என மணிரத்னம் முடிவு செய்ய அந்த சமயத்தில் துல்கர் தன் படங்களில் பிஸியாகிவிட்டார்.
பிறகு மணிரத்னம் ஆபிஸிலிருந்து போன் வர நீண்ட இடைவேளி பிறகு துல்கர் ஆபிஸ் போக, மணிரத்னம் வந்து பார்க்கவே இல்லையாம், துல்கரும் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி விட்டாராம்.
அதன் பிறகு மணிரத்னம் ஆபிஸிலிருந்து போன் செய்தாலும் துல்கர் எடுப்பதாக இல்லை.
அதன் காரணமாகவே அந்த படத்திலிருந்து துல்கர் விலக, தற்போது மணிரத்னம் துல்கருக்காகவே அதே மலையாள சினிமாவிலிருந்து ஒருவரை இறக்க வேண்டும் என டொவினோ தாமஸ், நிவின் பாலியிடம் பேசி வருகிறார்களாம்.