தக் லைஃப் படத்தை 5 முறை பார்ப்பேன்னு தெரியாம சொல்லிட்ட!! புலம்பும் யூடியூபர் பிரசாந்த்
தக் லைஃப்
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தக் லைஃப் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளிவந்தது. மணி ரத்னம் - கமல் ஹாசன் கூட்டணியில் உருவான இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
படம் நல்லா இல்லை என்பதே பெரும்பான்மையான ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மிகப்பெரிய ஏமாற்றத்தை கமல் - மணி ரத்னம் கொடுத்துவிட்டனர் என வருத்தத்துடன் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
நெட்டிசன்கள் இப்படத்தை இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள். மோசமான விமர்சனங்களை சந்தித்து வரும் தக் லைஃப் திரைப்படத்தை 5 முறை பார்ப்பேன் என்று யூடியூப் விமர்சகர் பிரசாந்த் தெரிவித்திருந்தார்.
யூடியூப் விமர்சகர் பிரசாந்த்
தற்போது அப்படத்தை பார்த்துவிட்டு தக் லைஃப் படத்தின் விமர்சனத்தை கூறியிருக்கிறார். அதில், படத்தை பார்க்கப்போகும் நாம் தான் தக் ஆக இருக்க வேண்டும், தக் லைஃப் குறித்து, படத்தின் ஒவ்வொரு கேரக்டர் பற்றி சிலாகித்து பேசினார்கள்.
இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்று பேசி மெய்சிலிர்க்க வைத்தனர். ஆனால் படம் உண்மையில் அப்படி இல்லை, படம் ரஃப் கட் போல் இருக்கு. ஐமேக்ஸில் உட்கார்ந்து படம் பார்க்கும்போது தான் நிலைமை புரிகிறது.
நான் வேறு சும்மா இல்லாமல், கமல் சார் படத்திற்கு சப்போர்ட் செய்தேன். தமிழ்மொழியை தூக்கி பிடித்தார். அதற்கு அது சப்போர்ட், சப்போர்ட் தான். நான் வேறு தெரியாமல் 5 முறை பார்க்கிறேன்னு சொல்லிவிட்டேன், 4 முறை பார்த்தால் பாடி தாங்குமான்னு தெரியலீங்க, பார்ப்போம்.
படத்தில், இப்படி பல கட்ட காமெடி விஷயம் இருக்கிறது. இந்த படம் அடிப்படையில் ரைட்டிங்கோட பெய்லியர் தான், கதையை சரியாக எழுதவே இல்லை என்று இட்ஸ் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதனை வைத்து பலரும் இணையத்தில் பிரசாந்தை கலாய்த்து வருகிறார்கள்.