நடிச்சது இரண்டே ரெண்டு படம் தான்!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை ராதா மகள்..
80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதா. டாப் நடிகையாக நடித்து வரும் நடிகை ராதா, ராஜசேகரன் நாயர் என்பவரை 1991 திருமணம் செய்து இரு மகள்கள் மற்றும் ஒரு மகனை பெற்றெடுத்தார். இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.
முதல் மகள் கார்த்திகா நாயர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் ஒருசில படங்களில் நடித்து வந்தார். 2015க்கு பின் சரியான வாய்ப்பில்லாமல் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் கார்த்திகா நாயர், காதலித்து வந்த காதலனை திருமணம் செய்து கரம் பிடித்தார். பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்திற்கு பல முன்னணி நட்சத்திரங்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில் இரண்டாம் மகள் துளசி நாயர் கடல் படத்தில் அறிமுகமாகினாலும் அதன்பின் யான் படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். அதன்பின் அவருக்கு வாய்ப்பில்லாமல் லண்டனில் செட்டிலாகிவிட்டார். 2020ல் BA. Business Administration படிப்பை முடித்தார்.
நடிக்கும் போது படுஒல்லியாக இருந்த துளசி நாயர் தற்போது கார்த்திகா திருமணத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறிவிட்டார். அவரது புகைப்படம் வீடியோவை பார்த்து பலர் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.