தினமும் 10 பேரு வருவாங்க! நான் அந்த மாதிரியான தொழிலுக்கு போக அவர் தான் காரணம்.. ரவுடி பேபி உருக்கம்
டிக்டாக்கில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர் தான் சுப்புலட்சுமி என்கிற ரவுடி பேபி. டிக் டாக் தலத்தில் மோசமான வார்த்தைகளை பேசி, கவர்ச்சியான உடைகளை அணிந்து பல சிக்கல்களில் மாட்டியுள்ளார்.
இவர் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து மற்றும் இலக்கியா போன்றவர்களுடன் சண்டை போட்டு சர்ச்சைகளில் சிக்கினார். மேலும் ரவுடி பேபி, ஒரு பெண்ணை தகாத வார்த்தையால் தாக்கி பேசி வீடியோவை பதிவிட்டார்.
இதற்காக போலீசாரால் ரவுடி பேபி கைது செய்யப்பட்டு குண்டாஸ் வழக்கும் போடப்பட்டது.
சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த ரவுடி பேபி பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
அதில் அவர், " நான் 20 வயதாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டேன். சில காரணங்களால் எங்கள் உறவை முடித்துக்கொண்டோம்.
அதன் பின்னர் நான் வேறொருவரை திருமணம் செய்து கொண்டேன் எங்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்".
"என்னுடைய கணவர் குடிகாரர் அதனால் குடும்பம் வறுமையில் வாடியது. அப்போது எனக்கு வேறு வழியில்லாமல் அந்த மாதிரியான தொழிலுக்கு சென்றேன். தினமும் 10 பேரு வருவார்கள். அவர்களும் குடித்து விட்டு என்னை துன்புறுத்தினார்கள். நான் தப்பான தொழிலுக்கு சென்றது என் கணவரால் தான்"என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.