விஜய்க்கு சிவகார்த்திகேயன் என்ன நன்றி மறந்தார்..அவர் என்ன பண்ணிட்டாரு!! திருப்பூர் சுப்ரமணியம் காட்டம்..
திருப்பூர் சுப்ரமணியம்
தமிழ் சினிமாவின் திரைப்பட விநியோகஸ்தரும் தியேட்டர் ஓனருமான திருப்பூர் சுப்ரமணியம், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் குறித்து பேசிய விஷயங்கள் தற்போது இணையத்தில் பேசுபொருளாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதில், விஜய்யின் ஜனநாயகன் படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் இன்னும் எந்த திரையரங்கிலும் கையெழுத்திடவில்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும், சிவகார்த்திகேயன் நன்றி மறந்துவிட்டார்? விஜய் கையில் துப்பாக்கி எடுத்துக்கொடுத்தார், எப்படி அவருடம் சிவகார்த்திகேயன் மோதலாம் என்று இணையத்தில் பேசி வருவது குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.

விஜய்க்கு சிவகார்த்திகேயன்
அதில், இதேபோல் தான் கடந்த ஆண்டு அஜித், விஜய் படம் ஒரேநாளில் வெளியானது. என்ன பிரளமானது. அதேபோல் தான் சிவகார்த்திகேயன் - விஜய் படம் வருகிறது, மக்கள் பார்க்க பார்க்கப்போகிறார்கள், நீங்கள் தான் இதை தேவையில்லாமல் பேசிபேசி பூதகரமாக்கிவிடுகிறீர்கள்.

சிவகார்த்திகேயன் என்ன நன்றி பண்ணனும், விஜய் அவருக்கு என்ன பண்ணி கொடுத்தார்?. துப்பாக்கி எடுத்துக்கொடுத்தால் நன்றி மறக்கணுமா?. சினிமாவில் ஒரு சீன் வருகிறது, இயக்குநர் அந்த சீனை வைக்கிறார், அதை வைத்து நன்றி மறக்கிறார் சிவகார்த்திகேயன் சொல்கிறீர்கள். வேறு யாரும் இப்படி சொல்லவில்லை, சமூகவலைத்தளத்தில் தான் இப்படி சொல்கிறீர்கள் என்று திருப்பூர் சுப்ரமணியம் பேசியிருக்கிறார்.