ஊழலில் ஊரிப்போன நாடுகளின் டாப் 10 பட்டியல்!! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
India
Syria
Sudan
Somalia
World
By Edward
ஊழல் மிகுந்த நாடுகள்
உலகின் இருக்கும் நாடுகளில் மிகுந்த ஊழல்களை செய்யும் டாப் 10 நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவுக்கு எந்த இடம் என்று பார்ப்போம்..

டாப் 10 பட்டியல்
- ஊழல் மிகுந்த நாடுகளின் டாப் 10 பட்டியலில் நம்பர் 1ல் இருப்பது தெற்கு சூடான் தானாம். எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று கூறுவதுபோல் அடிப்படை தேவைகளுக்கே லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று சூழல் தெற்கு சூடானில் இருக்கிறது.
- 2 ஆம் இடத்தில் சோமாலியா நாடு இருக்கிறது. ஊழல் நிறைந்த ஆட்சியமைப்பால், அடிமட்ட அரசு ஊழியர்கள் முதல் உயர்பதவி இருக்கும் அதிகார்கள் வரை ஊழல்வாதிகளாக இருப்பதால் மக்கள் திண்டாடி வருகிறார்கள்.
- எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுலா நாட்டில் ஊழலும் செழிப்பாக இருந்து, இதில் 3வது இடத்தில் இருக்கிறது.
- 4ஆம் இடத்தில் சிரியா இடம்பிடித்துள்ளது. இதனால் சிரியாவிலுள்ள 90 சதவீத மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். வேலையின்மை, அடிப்படை மருத்துவம், உணவு தேவைகள் என அனைத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாம்.
- எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் ஒன்றாக இருக்கும் கினியா, 2005ல் 3வது பெரிய எண்ணெய் வளமிகுந்த நாடாக இருந்தது. ஊழல் பெருகி ஏழ்மை நாடாக மாறியதால் ஊழலில் 5ஆம் இடத்தில் இருக்கிறது கினியா நாடு.

- 6 ஆம் இடத்தில் இருக்கும் எரித்திரியா நாட்டின் அதிகாரம் அதிபரிடமே இருக்கிறது. அதிபரின் சர்வாதிகாரி போக்கினால் நாடே ஊழலில் மிதக்கிறது.
- வட ஆப்ரிக்காவிலுள்ள நாடு தான் லிபியா. கனிமவளங்கள் நிறைந்த நாடாக இருந்த லிபியாவில் நடந்த உள்நாட்டு கலவரம், போராட்டத்தால் ஊழல் பெரு மக்கள் வறுமையில் இருந்து வருகிறார்கள். இதனால் 7வது இடத்தில் லிபியா இருக்கிறது.
- அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகரகுவா, ஊழல் மிகுந்த நாடாக 8வது இடத்தினை பிடித்துள்ளது. எரிமலைகள், அழகான கடற்கரைகள் நிறைந்து காணப்படும் அந்நாட்டில் ஊழல் நிறைந்துள்ளது.
- ஊடல் நிறைந்த பட்டியலில் வட கொரியா 9வது இடத்தில் இருக்கிறது. கிம் ஜாங் உன்னின் சர்வாதிகார ஆட்சியில் வட கொரியா ஊழல் நாடக மாறியிருக்கிறது.
- ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் 10வது இடத்தில் சூடான் நாடு அமைந்துள்ளது.

180 நாடுகள் இருக்கும் உலகில், ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 96வது இடம் கிடைத்துள்ளது.