எம் எல் ஏ மகன்..இப்போ பிரபல நடிகர்!! விஜய்யுடன் இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா?

Vijay Actors Tamil Actors
By Edward Dec 29, 2025 11:30 AM GMT
Report

எம் எல் ஏ மகன்

நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு விஜய்க்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்த படம் தான் பூவே உனக்காக. இப்படத்தில் மச்சினிச்சி வர்ற நேரம் மண்மணக்குது என்ற பாடலில் ஷூட்டிங் நடக்கும். அப்பாடலுக்கு முரளி நடனமாடியிருப்பார். அதை விஜய் பார்க்கும்படியான காட்சி அமைந்திருக்கும்.

எம் எல் ஏ மகன்..இப்போ பிரபல நடிகர்!! விஜய்யுடன் இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா? | Dmk Mla Son Now A Popular Actor With Vijay Photo

அப்போது விஜய் ஒரு நபர்மீது கைப்போட்டு ர்சித்து பார்ப்பார். அந்த நபர் தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர்தான். அவர்ன் குடும்பம் பாரம்பரிய அரசியல் குடும்பமாம். அவரின் தந்தை இரண்டுமுறை தமிழ்நாட்டில் எம் எல் ஏவாக இருந்தவர் தான்.

எம் எல் ஏ மகன்..இப்போ பிரபல நடிகர்!! விஜய்யுடன் இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா? | Dmk Mla Son Now A Popular Actor With Vijay Photo

இளவரசு

அவர் வேறுயாருமில்லை, தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வரும் நடிகர் இளவரசு தான். முதல்முறையாக சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி 80, 90களில் வெளியான கருத்தம்மா, பாஞ்சாலங்குறிச்சி, பெரிய தம்பி, இனியவளே உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.

எம் எல் ஏ மகன்..இப்போ பிரபல நடிகர்!! விஜய்யுடன் இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா? | Dmk Mla Son Now A Popular Actor With Vijay Photo

குணச்சித்திர ரோலில் தற்போது நடித்து வரும் நடிகர் இளவரசுவின் தந்தை மலைச்சாமி, திமுக எம் எல் ஏ வாக இருந்தவர். 1967 முதல் 1971 வரை தமிழ்நாட்டில் முதன்முறையாக திமுக ஆட்சி அமைத்த காலத்தில் மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம் எல் ஏவானா மலைச்சாமி. அவரின் இரண்டாம் மகன் தான் இளவரசு என்பது குறிப்பிடத்தக்கது.