டாப் 10 இந்திய பணக்காரர நடிகர்கள் யார் யார் தெரியுமா? எப்பவும் நம்பர் 1 இவர்தான்..
இந்திய சினிமாவில் இருக்கும் நடிகர்கள் தான் வாங்கும் சம்பளத்தை வைத்து பல தொழில்களில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்து வருகிறார்கள். அப்படி இந்திய நடிகர்களில் டாப் 10 பணக்கார நடிகர்கள் யார் என்று பார்ப்போம். இதில் தென்னிந்திய நடிகர்கள் யார் யார் இருக்கிறார்கள் என்றும் பாருங்கள்..

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ராம் சரண், ரூ.1630 கோடி சொத்து மதிப்புகளுடன் 10வது இடத்திலும், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ரூ. 1650 கோடி சொத்துக்களுடன் 9வது இடத்திலும் இருக்கிறார்.

பாலிவுட் சினிமாவில் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் ரூ. 1680 கோடி சொத்துக்களுடன் 8வது இடத்திலும், மெகா ஸ்டாரான சிரஞ்சீவி ரூ. 1750 கோடி சொத்துக்களுடன் 7வது இடத்தில் இருக்கிறார்.

பாலிவுட் நடிகர் அமீர் கான் ரூ. 1860 கோடி சொத்துக்களுடன் 6வது இடத்திலும் நடிகர் அக்ஷய் குமார் ரூ. 2250 கோடி சொத்துக்களுடன் 5வது இடத்தில் இருக்கிறார்.

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ரூ.3100 கோடி சொத்துக்களுடன் 4வது இடத்திலும் பாலிவுட் ஸ்டார் நடிகர் சல்மான் கான் 3225 கோடி சொத்து மதிப்புடன் 3வது இடத்திலும் இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழும் நடிக நாகர்ஜுனா டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ரூ. 5000 கோடி சொத்து மதிப்புகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

இந்திய சினிமாவில் அதிக சொத்துக்களை வைத்திருப்பவர்கள் பட்டியலில் நடிகர் ஷாருக்கான் ரூ. 12931 கோடி சொத்து மதிப்புகளை வைத்து நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.