இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீராங்கனை யார் தெரியுமா!! டாப் 10 லிஸ்ட்..
பணக்கார கிரிக்கெட் வீராங்கனை
சினிமா பிரபலங்களை தாண்டி கிரிக்கெட் வீரர்கள் தான் அதிகம் சம்பாதிப்பார்கள். அப்படி இந்தியாவின் நம்பர் 1 பணக்கார கிரிக்கெட் வீராங்கனை யார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அப்படி இந்தியாவின் டாப் 10 பணக்கார கிரிக்கெட் வீராங்கனை யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..

இந்த பட்டியலில் ரூ. 80 லட்சம் சொத்து மதிப்பு வைத்துள்ள ரேணுகா சிங் தாக்கூர் 10வது இடத்தில் இருக்கிறார்.
இவருக்கு அடுத்தபடியாக யாஸ்திகா பாட்டியா ரூ. 1 கோடி சொத்து மதிப்பு வைத்து 9வது இடத்தில் இருக்கிறார்.

8வது இடத்தில் ரூ. 3 முதல் 5 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கும் பூஜா வஸ்திரகர் இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரூ. 5 கோடி சொத்து மதிப்பு வைத்து 7 வது இடத்தில் இருக்கிறார்.
தீப்தி ஷர்மா, ரூ.8 கோடி சொத்து மதிப்புடன் 6வது இடத்தில் இருக்கிறார்.

5வது இடத்தில் வீராங்கனை ஷஃபாலி வர்மா ரூ. 8 முதல் 11 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
4வது இடத்தில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி ரூ.8 கோடி சொத்து மதிப்புகளுடன் இருக்கிறார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர், ரூ.24 முதல் 26 கோடி சொத்துக்களுடன் 3வது இடத்தில் இருக்கிறார்.

டாப் 2
இந்த டாப் 10 பட்டியலில் 2வது இடத்தில் அதிரடி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ரூ.32 கோடி முதல் 34 கோடி சொத்து வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஓய்வு பெற்ற இந்திய மகளின் அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் ரூ.40 முதல் 45 கோடி சொத்து மதிப்புகளுடன் இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீராங்கனை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.