அதிக வருமான வரி செலுத்தும் டாப் நடிகர்கள்!! தளபதி விஜய் எவ்வளவு கட்டுகிறார்?

Vijay Shah Rukh Khan Salman Khan Amitabh Bachchan Income Tax Department
By Edward Sep 16, 2025 03:45 PM GMT
Report

ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப அனைத்து குடிமகன்களும் வரி செலுத்துவது ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது. கோடிகளில் வருமானம் ஈட்டு வரும் முன்னணி திரைப்பிரபலங்கள் தங்களின் ஆண்டு வருமானத்திற்கான வரியை செலுத்தி வருகிறார்கள்.

அப்படி நடப்பு நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய திரைப்பிரபலங்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகும். அப்படி இண்டஹ் ஆண்டு அதிக வரி செலுத்திய நடிகர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதிக வருமான வரி செலுத்தும் டாப் நடிகர்கள்!! தளபதி விஜய் எவ்வளவு கட்டுகிறார்? | Top 10 Tax Payers In Indian Cinema Actors 2025

  • இந்தியாவில் அதிக வரி செலுத்தும் திரை பிரபலங்களில் 10வது இடத்தில் இருப்பவர் நடிகர் ஷாஹித் கபூர். நடப்பு நிதியாண்டில் அவர் ரூ. 14 கோடி ரூபாய் வருமான வரி கட்டியுள்ளார்.
  • 9வது இடத்தில் நடிகை கரீனா கபூர், ரூ. 20 கோடியை வருமான வரியாக செலுத்தியுள்ளார்.
  • 8வது இடத்தில் பாலிவுட் பிரபலம் கபில் சர்மா உள்ளார். அவர் 26 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளார்.
  • நடிகர் ஹிருத்திக் ரோஷன் ரூ. 28 கோடி வரி செலுத்தி 7வது இடத்தில் உள்ளார்.
  • நடிகர் ரன்பீர் கபூர் இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். அவர் 36 கோடி ரூபாய் வரி செலுத்தியிருக்கிறார்.
  • நடிகர் அஜய் தேவ்கன் ரூ. 42 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தி 5வது இடம் பிடித்துள்ளார்.
  • பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிபாத் பச்சன், ரூ. 71 கோடி வரி கட்டி 4வது இடத்தில் உள்ளார்.
  • நடிகர் சல்மான் கான் 75 கோடி வருமான வரி கட்டி 3வது இடத்தில் இருக்கிறார்.
  • நடிகர் விஜய் வருமான வரியாக ரூ. 80 கோடி செலுத்தி 2வது இடத்தில் உள்ளார்.
  • பாலிவுட் சினிமாவில் கிங் ஷாருக்கான் நடப்பு ஆண்டில் 92 கோடி ரூபாய் வருமான வரியாக செலுத்தி இந்திய சினிமாவில் அதிக வரி கட்டிய நடிகர்கள் லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருக்கிறார்.