2025ன் உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்!! 90.6 பில்லியன் டாலர்கள் வைத்துள்ள அம்பானிக்கு எந்த இடம்?
உலகின் டாப் பணக்காரர்கள்
உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த லிஸ்ட்டில் முதல் இடத்தில் டாப் பணக்காரரான எலான் மஸ்க் பிடித்திருக்கிறார். 419.1 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பு பெற்று முதலிடத்தில் இருக்கிறார் எலான் மஸ்க்.
அவர்களுக்கு அடுத்தபடியான லிஸ்ட் ஒரு பக்கம் இருக்க, இந்தியாவின் டாப் பணக்காரர்களான முகேஷ் அம்பானி, கெளதம் அதானி எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.
அம்பானி, அதானி
அப்படி 90.6 பில்லியன் டாலர்கள் நிகர சொத்து மதிப்புள்ள முகேஷ் அம்பானி 17வது இடத்தினை பிடித்துள்ளார். அவருக்கு பின் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி 21வது இடத்தினை பிடித்துள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2வது இடத்திலும், LVMH தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் 3வது இடத்திலும், லாரன்ஸ் எலிசன், மார்க் ஜுக்கர்பெர்க், செர்ஜி பிரின், ஸ்டீவன் பால்மர், வாரன் பஃபெட் மற்றும் ஜேம்ஸ் வால்டன் போன்றவர்களும் இந்த லிஸ்ட்டில் அடுத்தடுத்து இருக்கிறார்கள்.