தமிழ் சினிமாவின் பணக்கார நடிகைகள்.. டாப் 5 லிஸ்ட் இதோ
தமிழ் திரையுலகில் பணக்கார நடிகைகளாக வலம் வரும் ஐந்து பேர் குறித்துதான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
1. நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நயன்தாரா ரூ. 200 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார் என கூறப்படுகிறது.
2. தமன்னா
கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார் தமன்னா. இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 120 கோடி ஆகுமாம்.
3. சமந்தா
இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் சமந்தா தற்போது பாலிவுட்டில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 95 கோடி முதல் ரூ. 110 கோடி என சொல்லப்படுகிறது.
4. த்ரிஷா
20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார் த்ரிஷா. இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 85 கோடி என தகவல் தெரிவிக்கின்றன.
5. ராஷ்மிகா மந்தனா
நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, ரூ. 66 கோடி சொத்துக்கு சொந்தக்காரராக உள்ளார் என கூறப்படுகிறது.