17 வருட சினிமா வாழ்க்கை! பிரபல நடிகரை ஒதுக்கி வரும் கோடியில் புரளும் நடிகை..

bollywood deepikapadukone salmanakhan
By Edward Feb 23, 2022 08:10 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோன். மாடலிங் துறையில் இருந்து வந்து பின் 2015ல் ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் இந்தி படத்தில் அறிமுகமாகினார். அதன்பின் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்து வந்த தீபிகா ரஜினிகாந்தின் அனிமேஷன் படமான கோச்சடையான் படத்தில் தமிழில் நடித்தார்.

இதையடுத்து கோடிகளில் சம்பளம் வாங்கும் இந்திய நடிகைகளில் முதல் இடத்தில் இருந்து வருகிறார். 17 வருட சினிமா வாழ்க்கையில் தீபிகா படுகோனே பாலிவுட் சினிமாவில் டாப் நடிகரும் சூப்பர் ஸ்டாருமான சல்மான் கானுடன் இன்னும் ஜோடிப்போட்டு நடிக்கவில்லை.

இதற்கு என்ன காரணம் என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார் தீபிகா. சல்மான் கானுடன் இருக்கும் தொடர்பு அழகானது. அவருக்கு எப்போது நன்றியுள்ளவளாக இருக்க காரணம் என்னை முதலில் படத்தில் நடிக்க வைக்க கூப்பிட்ட முதல் நபர் அவர் தான்.

அப்போது மாடலிங்கில் ஆர்வம் அதிகமாக இருக்கையில் நடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். அதன்பின் 2 ஆண்டுகளுக்கு பின் ஓம் சாந்தி ஓம் படம் கிடைத்தது என்று கூறியுள்ளார்.