பணத்துக்காக அந்த மாதிரி காட்சி! பாலிவுட்டை தூக்கி எறிந்த பிரபல டீச்சர் நடிகை..
தென்னிந்திய நடிகைகள் பெரும்பாலும் எப்படியாவது உள்ளூரில் நல்ல இடத்தினை பிடித்து அதன்பின் வட இந்திய பக்கம் சென்று கோடியில் சம்பாதிக்கலாம் என்று கனவோடு சினிமாவில் நடித்து வருவார்கள்.
அந்த வாய்ப்பு இரு முறை கிடைத்து ஒரு தென்னிந்திய நடிகை உதறி தள்ளியுள்ளாராம். மலையால சினிமாவில் காதல் மையப்படுத்திய படத்தில் டீச்சராக நடித்து அனைத்து தரப்பினரையும் ஈர்த்தவர் தான் அந்த நடிகை.
சமீபத்தில் தமிழில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் தெலுங்கு, மலையாளம் என நடித்து வரும் நடிகையை பாலிவுட் பக்கத்தில் இருக்கும் ஒரு பிரபல நிறுவனம் அணுகியிருக்கிறது.
பேச்சு வார்த்தையில் இப்படியொரு வாய்ப்பு கிடைக்காத அளவிற்கு இரு படங்கள் பேசப்பட்டதாம். ஆனால் அம்மணி அங்கு சென்று நடித்தால் அந்த மாதிரியான பலான காட்சிகளிலும் நடிக்க வேண்டும்.
அது நமக்கு செட்டாகாது என்று கூறி தூக்கி எறிந்துவிட்டாராம் அம்மணி. பணம் அதிகமாக கிடைக்கிறது என்று நினைத்து அப்படியான காட்சிகளை உதறித்தள்ளியது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.