20 வருட பந்தம்..திரிஷாவின் ப்ரீ பர்த்டே கொண்டாட்டம்!! யாரு கூட இருக்காங்க தெரியுமா?

Trisha Viral Video Birthday Tamil Actress
By Jai May 03, 2026 05:45 AM GMT
Report

நடிகை திரிஷா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, தற்போது கருப்பு, விஸ்வபரம்பரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சூர்யாவுடன் நடித்த கருப்பு படம் வரும் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. ஒரு ஒரு பக்கம் இருக்க, திரிஷா பற்றிய பல விஷயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

20 வருட பந்தம்..திரிஷாவின் ப்ரீ பர்த்டே கொண்டாட்டம்!! யாரு கூட இருக்காங்க தெரியுமா? | Trisha 33Rd Pre Birthday Tribute Video Post From

அதற்கு காரணம், தவெக தலைவர் விஜய்யுடன் திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்றது முதல், விஜய்யுடன் நடித்த படங்களின் பாடல்களை இணையத்தில் பகிர்வது வரை பலராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாளை மே 4 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகவுள்ளது.

அதே நாளில் தான் நடிகை திரிஷாவின் 33 வது பிறந்தநாளும் கூட. பிறந்தநாளுக்கான சில பதிவுகளை திரிஷா பகிர்ந்து வரும் நிலையில், தன்னுடைய தோழிகளான நடிகை சார்மி கவுர், நிகிதா பட்டேலுடன் ப்ரீ பர்த்டே கொண்டாட்டத்தை வெளிநாட்டில் கொண்டாடி இருக்கிறார் திரிஷா.

ப்ரீ பர்த்டே ட்ரிபியூட் வீடியோவை நடிகை நிகிதா பட்டேல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து திரிஷாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.