வாய்ப்பில்லாமல் கடைசியில் இந்த நிலையா? நடிகை திரிஷா எடுத்த திடீர் முடிவு...
தமிழ் ரசிகர்களின் இளசுகளின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை திரிஷா. ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடிக்க ஆரம்பித்து அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானார். பின் காதல் நிச்சயம் வரை சென்று நின்றதால் மன அழுத்தத்தில் இருந்த படங்களில் கவனம் செலுத்த தவறினார். இதனால் முழு மார்க்கெட்டை இழந்தார். பின் 96 படத்தில் நடித்து தன் மார்க்கெட்டை மீண்டும் பிடித்தார். சமீபத்தில் சில படங்களில் நடித்தாலும் ஓரளவிற்கு தான் பேசப்பட்டது.
இந்நிலையில், திரிஷா நடித்த படங்கள் எதுவும் சமீபகாலமாக வெளிவராததால் தற்போது திரிஷா வெப் சீரிஸ் நடிப்பதற்கு ஆர்வம் செலுத்தி வருகிறார். மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இவர் அடுத்தடுத்து 2 வெப் சீரிஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்திற்கு 2 மடங்கு சம்பளம் வாங்கும் திரிஷா தற்போது வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த உள்ளதால் 3 மடங்கு சம்பளம் வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு திரிஷாவுக்கு அமையும் என்று பலர் விமர்சித்து வருகிறார்கள்.