அந்த விஷயத்தில் விஜய்யும் திரிஷாவும் ஒன்னு ஆகிட்டாங்க.. கிசுகிசு நடுவில் இப்படியா
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் திரிஷா. இவர்கள் இருவரும் இதுவரை ஐந்து முறை இணைந்து ஜோடியாக நடித்துள்ளனர். கடைசியாக வெளிவந்த லியோ படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் திரிஷா.
மேலும் தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் Goat திரைப்படத்திலும் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளாராம். விஜய்க்கும் திரிஷாவிற்கும் இடையே சில கிசுகிசுக்கள் சென்று கொண்டிருக்கும் தற்போது அவர்கள் பற்றி வேறொரு செய்தி இணையத்தில் உலா வருகிறது.
அதன்படி, தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருக்கிறார் என கூறப்படுகிறது. Goat படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ள விஜய், தன்னுடைய அடுத்த படத்திற்காக ரூ. 250 கோடி வாங்குவார் என பேசப்படுகிறது.
நடிகர்களில் விஜய் எப்படி அதிகம் சம்பளம் வாங்குபவராக இருக்கிறாரரோ, அதே போல் நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கி வருகிறாராம் திரிஷா. இவர் தற்போது நடிக்கும் திரைப்படங்களுக்கு ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்றும், தமிழ் நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்குவது திரிஷா தான் என்றும் கூறப்படுகிறது.