21 வருட சினிமா வாழ்க்கை!! 68 வயது நடிகரை 17 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்த நடிகை திரிஷா!!
தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் நடித்து மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை திரிஷா. சமீபத்தில் நடிகர் விஜய்யின் லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ இயக்கத்தில் நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு அடுத்த வாய்ப்புகளை கொடுத்தது.
லியோ படத்தினை தொடர்ந்து தற்போது அஜித்தின் விடாமுயற்சி, கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் Thug Life படம் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவுடன் ரேப் சீன் லியோ படத்தில் இல்லை என்று மோசமாக விமர்சித்திருந்தார்.
இதனை கண்டித்து திரிஷா ஒரு பதிவினை போட, அதற்கு பல நட்சத்திரங்கள் ஆதரவாக பேசி எச்சரிக்கை விடுத்தபடி கருத்துக்களை தெரிவித்தனர்.
இதற்கு தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியும் திரிஷாவுக்கு ஆதரவாகவும் மன்சூர் அலிகான் பேசியதை கண்டித்தும் ஒரு கருத்தினை பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக போலிசார் விசாரணை நடத்தியதில் மன்சூர் அலிகான் திரிஷாவை எதிர்த்து புகாரளித்திருந்தார்.
ஆனால், மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சுக்கு நடிகை திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பொதுவெளியில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று உணர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகை திரிஷாவுக்கு ஆதவாக பேசிய நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் Vishwambara என்ற படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இயக்குனர் வசிஸ்த்தா மல்லிடி இயக்கத்தில் 17 ஆண்டுகள் கழித்து சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் நடிகை திரிஷா.
கடைசியாக 2006ல் ஸ்டாலின் என்ற படத்தில் மெகா சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் திரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.