நயன்தாராவிற்கு திருமணம் முடிஞ்சாச்சு.. அடுத்து திரிஷாவிற்கு எப்போது திருமணம்? ரசிகர்கள் கேள்வி
Nayanthara
Trisha
By Karthick Raja
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா. இவர் கைவசம் தற்போது பொன்னியின் செல்வன், ராங்கி ஆகிய படங்கள் உள்ளன. திரையுலகில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார் நடிகை திரிஷா.
இந்நிலையில், நடிகை திரிஷாவின் சக நடிகையும், தோழியுமான நடிகை நயன்தாராவிற்கு சமீபத்தில் திருமணம் ஆனதை அடுத்து, திரிஷாவிற்கு எப்போது திருமணம் என்று கேள்வி கேட்க ரசிகர்கள் துவங்கிவிட்டனர்.
ஏற்கனவே வருண் மணியன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் திரிஷாவிற்கு நடைபெற்றது. ஆனால், சில மாதங்களிலேயே இருவரும் தங்களது உறவை முறியத்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் கேள்விக்கு திரிஷா பதிலளிப்பாரா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.