வேண்டாம்ன்னு தூக்கி போட்ட திரிஷா!! வேற வழியில்லாம விக்னேஷ் சிவனுக்கு ஓகே சொன்ன டாப் நடிகை...
தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் விக்னேஷ் சிவன். இதற்கு முன் ஒருசில படங்களில் போஸ்டர் டிசைன் செய்து வந்த விக்னேஷ் சிவன் விஐபி படத்தில் நடித்த போது தனுஷ் கொடுத்த ஆதரவால் நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.
அப்படம் சூப்பர் ஹிட் கொடுத்ததோடு நடிகை நயன் தாராவின் காதலையும் சம்பாதித்தார். இதன்பின் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு நயன் தாராவை திருமணம் செய்து இரட்டை குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தார். இதன்பின் அஜித்தின் ஏகே62 படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் சில காரணங்களால் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் திருமணத்திற்கு முன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தினை இயக்கி கலவையான விமர்சனத்தை பெற்றார். இப்படத்தில் நடிகை நயன் தாரா மற்றும் சமந்தா, விஜய் சேதுபதியின் காதலிகளாக நடித்து வந்தனர்.
ஆனால் இப்படம் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு முன் உருவாகிய கதை என்று விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். அப்போது சமந்தா ரோலில் நடிக்க நடிகை திரிஷாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டதாம். ஆனால் திரிஷாவால் நடிக்க முடியாமல் போனதால் இரு ஆண்டுகள் இப்படம் உருவாக தாமதமாகியதாம்.
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பின்பும் திரிஷாவால் நடிக்க முடியாமல் போனதால் சமந்தாவிடம் கதையை கூறி கால்ஷீட் வாங்கியதாக நடிகை சுஹாசினி மணிரத்னம் எடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
