இந்த வாட்டி தொழிலதிபர் கிடையாது!! தயாரிப்பாளரை திருமணம் செய்ய போகும் நடிகை திரிஷா..
தென்னிந்திய சினிமாவில் 90களில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது தன்னுடைய சிம்மாசனத்தை கட்டி வருபவர் தான் நடிகை திரிஷா. பொன்னியில் செல்வன் படத்திற்கு பின் மிகப்பெரிய வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி, கமல் ஹாசனின் 234 வது படம், தனுஷின் டி50, சல்மான் கானின் படம் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தற்போது பிரபல விருது விழாவில் கலந்து கொண்டு பொன்னியின் செல்வன் படத்திற்காக விருதினை வாங்கியுள்ளார். அந்நிகழ்வு கிளாமர் ஆடையில் ரசிகர்களை மெய்சிரிக்க வைத்துள்ளார்.
இந்நிலையில், ஏற்கனவே நிச்சயம் வரை சென்று திருமணத்தை நிறுத்திய திரிஷாவிற்கு 40 வயதை எட்டியும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
அதற்கு காரணங்களை பலவற்றை கூறி மழுப்பி அந்த திரிஷாவிற்கு குடும்பத்தினர் விரைவில் திருமணத்தை செய்யவுள்ளார்களாம்.
மலையாள திரையுலகில் உள்ள பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார் என்றும் ஆனால் அது அவர் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது.