ஒட்டிமொத்த கால்ஷீட்டை காலி செய்த விடாமுயற்சி.. பழிக்கு பழிவாங்கும் திரிஷா...
தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய ரீ- எண்ட்ரி மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் நடிகை திரிஷா. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்தப்பின் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். அதன்பின் அஜித்தின் விடாமுயற்சி, கமல் ஹாசனின் thug Life, சல்மான் கான் படம் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் கடந்த ஆண்டு முதலே பல நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்து வந்தார். கடந்த ஆண்டு சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஷூட்டிங் தாமதமானது. அதோடு ஐஷ்வர்யா இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்த லால் சலாம் படத்தின் பல கோடி நஷ்டதால் பணப்பிரச்சனை வந்துள்ளது.
தற்போது மீண்டும் ஷூட்டிங் ஆரம்பமான நிலையில், திரிஷா அதிகளவில் கோபத்தில் இருந்திருக்கிறார். அதற்கு காரணம் கமலின் thug Life படத்திற்கான கால்ஷீட் கொடுத்ததால், விடாமுயற்சி சூட்டிற்கு வர முடியாது என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே தன்னுடைய கால்ஷீட் காலியாக்கிவிட்டீர்கள் என்ற கோபத்தில் அதை பழிவாங்க விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்கு ஆப்பு வைத்திருக்கிறார் திரிஷா.