நடிகை திரிஷா தூக்கமில்லாமல் அவதிப்படுகிறாரா? 2062ல் தான் அது நடக்குமாம்...

Trisha Tamil Actress Actress
By Jai Apr 29, 2026 04:30 PM GMT
Report

நடிகை திரிஷா

சினிமாத்துறையில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து நடித்து வரும் நடிகை திரிஷா நடிப்பில் கருப்பு படம் ரிலீஸாகவுள்ளது. சமீபகாலமாக திரிஷாவின் பேச்சுக்கள் தான் இணையத்தில் பலரது குரலாக இருக்கிறது.

அதற்கு காரணம் திரிஷா, நடிகர் விஜய்யுடன் திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றாக ஒரே நிற ஆடையணிந்து சென்றது தான். இதனையடுத்து திரிஷா சமூக வலைத்தள பக்கத்தில் பகிரும் பதிவுகள் அனைத்தும் பலரது கவனத்தை ஈர்க்கும்.

நடிகை திரிஷா தூக்கமில்லாமல் அவதிப்படுகிறாரா? 2062ல் தான் அது நடக்குமாம்... | Trisha Krishnan Shares Instagram Post About Sleep

அந்தவகையில், சமீபத்தில் பகிர்ந்த ஒரு பதிவில், ஒரு மணி நேரத்திற்கு தூக்கத்தை இழந்தால், அதை ஈடுகட்ட சுமார் 4 நாட்களாகும். அப்படி கணக்கு பார்த்தால் 2062ல் தான் நான் நன்றாக உணர்வேன் என்று பதிவுட்டுள்ளார்.

இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள், திரிஷா தூக்கமில்லாமல் அவதிப்பட்டு வருகிறாரா? என்று ஏதோ மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.

Gallery