நாயை கோவிலுல்லுள் அழைத்துச் சென்றாரா நடிகை திரிஷா..சர்ச்சையான பதிவு..
திரிஷா
நடிகை திரிஷாவை சுற்றி ஆரம்பகாலத்தில் இருந்தே ஏதாவது ஒரு விஷயம் பரபரபாக பேசபட்டு வரும். அப்படி சமீபத்தில் நடிகர் விஜய்யின் ஜோடியாக திருமண நிகழ்ச்சிக்கு சென்ற விஷயம் பர்பரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தன்னை மோசமாக பேசியவர்களுக்கு எதிராக தன்னுடைய கண்டனத்தையும் தெரிவித்து வருவார். சமீபத்தில், தன்னுடைய நாய் குறித்த சில பதிவுகளை திரிஷா இணையத்தில் பகிர்வதுண்டு.

அந்தவகையில் இன்று ஹனுமன் ஜெயந்தி என்பதால் திரிஷா அனுமன் கோவிலுக்கு தன்னுடைய செல்ல பிராணியான இஸ்ஸியுடன் சென்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியை பகிர்ந்துள்ளார்.
சர்ச்சையான பதிவு
தன்னுடைய செல்லப்பிராணி இஸ்ஸி முதன்முறையாக கோவிலுக்கு வருவதாக கூறி அந்த பதிவினை பகிர்ந்துள்ளார்.
நாயுடன் கோவிலுக்கு சென்றதாக திரிஷா குறிப்பிட்டு இருந்தாலும், பகிர்ந்த புகைப்படம் குளோசப்பில் இருப்பதால் ரசிகர்கள் பலரும் செல்ல பிராணியை கோவிலுக்குள் அழைத்து சென்றாரா என்ற விவாதத்தை எழுப்பினார்கள்.
ஒரு நாயை கோவிலுக்கு அழைத்து செல்லலாமா என்ற கேள்வியை பக்தர்களும் விமர்சித்து வருகிறார். அதே நேரத்தில் சிலர் பைரவரை வணங்குவது என்பது நாயை தெய்வமாக வழிபடும் முறைதான், அப்படி இருக்கையில் நாயை, கோவிலுக்குள் அழைத்து செல்வதில் எந்த தவறும் இல்லை என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
